Super User / 2011 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு வடக்கிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் அக்காட்சியை செல்லிடத் தொலைபேசியில் படம்பிடித்து வெளியிட்டதாக கூறப்படும் அப்பாடசாலையின் இளம் நீச்சல் பயிற்றுநர் ஒருவரை பொலிஸார் தேடி வருவதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி லங்காபுவத் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நீச்சல் பயிற்றுநர் குறித்த மாணவியுடன் நட்பாகிக்கொண்டு, வார இறுதிநாட்களில் நீச்சல் பயிற்சிக்காக வரும் மாணவியை ஆட்களற்ற கட்டிடமொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதாக விசாரணையின் மூலம் தெரியவந்;துள்ளது.
மேற்படி பயிற்றுநர், பல தடவை சம்பள உயர்வு கோரியதாகவும் ஆனால் முகாமைத்துவ கொள்கைக்கிணங்க அதற்கு பாடசாலை முகாமைத்துவம் மறுப்பு தெரிவித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் முகாமைத்துவத்தை மிரட்டுவதற்காக அவர் மேற்படி மாணவியை துஷ்பிரயோகம் செய்து வீடியோவில் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்தேக நபர் தற்போது தனது பணியை கைவிட்டுள்ளதுடன் அவர் தற்காலிகமாக வசித்து வந்த வீட்டிலிருந்தும் வெளியேறியுள்ளதாக விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சந்தேக நபரின் புகைப்படம் விசாரணையாளர்களிடம் உள்ளது. அவரை கைதுசெய்ய உதவுமாறு கோரி அப்புகைப்படத்தை வெளியிடுவார்கள் அதிகாரிகள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த மாணவி ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
(lankapuvath.lk)
9 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago
Riznia Wednesday, 17 August 2011 02:06 AM
படிக்கவரும் மாணவிகளை ஏமாற்றி கவர்ந்து இப்படி துஷ்பிரயோகம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
Reply : 0 0
Akp.nimzard Wednesday, 17 August 2011 11:25 AM
றிஸ்னியா அதற்கு படிக்கவரும் மாணவிகளும் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். இது அந்த மாணவியின் விருப்பத்துடன் தான் நடந்துள்ளது. அதற்கு தான் பாடசாலை அந்த மாணவியை இடைநிறுத்தி வைத்துள்ளது. எது எப்படியோ அந்த பயிற்றுநர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
Reply : 0 0
xlntgson Wednesday, 17 August 2011 09:50 PM
Akp இரு பக்கமும் பேசுவது போல் தெரிகிறது-
பரவாயில்லை. ஆனால் குழப்பக் கூடாது. விருப்பத்தின் பேரில் கூட ஆசிரியர் ஒருவருக்கு இம்மாதிரியான லீலைகளில் ஈடுபட இயலாது!
ஆசிரியர்- மருத்துவர், பொலீசார் போல அல்ல மிக கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். பொலீஸ்காரர்களுக்கு கெட்டவார்த்தையில் பேசி சமாளிக்கவேண்டிய இடத்தில் அவ்வாறு செய்ய சட்டம் உண்டு, ஆசிரியருக்கு உண்டா?
எத்தனை பேர் பொலீஸ்காரர்கள் கெட்ட வார்த்தையில் பேசினதற்கு பதில் பேசினார்கள்?
ஆசிரியத்தொழிலின் கெளரவம் பேணப்படவேண்டும் இந்நிலையில் இளம் ஆசிரியர் தேவையா
Reply : 0 0
hamsa Wednesday, 17 August 2011 09:57 PM
நன் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago