2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

குத்துஸ் தினத்தினை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி

Super User   / 2011 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்தேச ரீதியில் கொண்டாடப்படவுள்ள குத்துஸ் தினத்தினை (பலஸ்தீனிய மக்களுடன் ஒருமைப்பாட்டடை வெளிப்படுத்தும் தினம்) முன்னிட்டு கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயத்தின் கலாசார பிரிவு புகைப்பட கண்காட்சியொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு இல. 41, கொழும்பு திட்ட வீதியிலுள்ள மெரைன் கிரேன்ட் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, ஈரான் தூதரகத்தின் கலாசார பிரிவினால் நடத்தப்பட்ட சித்திர போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் என பலர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X