Super User / 2011 ஓகஸ்ட் 22 , மு.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தின் கலாசார பிரிவு குர்ஆனிய கலை மற்றும் எழுத்தணி கலை தொடர்பான கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஆகஸ்ட் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இல. 6 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தையிலுள்ள ஈரான் தூதுவராலயத்தின் கலாசார பிரிவில் இடம்பெறவுள்ளது.
உலக புகழ் பெற்ற ஈரானிய ஓவியரும் எழுத்தணி கலைஞருமான குலாம்ரெஸா ரெஹ்பேமாவின் தெரிவு செய்யப்பட்ட ஓவிய மற்றும் எழுத்தணி கலை படைப்புக்களே இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
1959ஆம் ஆண்டு ஈரானில் பிறந்த குலாம்ரெஸா ரெஹ்பேமா பல விருதுகள் வென்ற உலகப் புகழ் பெற்ற கலைஞராவார்.
கலைத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றுள்ள இவர் ஈரான் தலைநகரான ரெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றுகின்றார்.
சர்வதேச நூதனசாலைகள் குழுவின் உறுப்பினரான இவர் ஈரானின் எழுத்தணி கலை கலாபீடத்தின் பட்டதாரியுமாவார். கடந்த 1993ம் ஆண்டு முதல் உலகின் பல நாடுகளில் இவர் தனது படைப்புக்களை காட்சிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த கண்காட்சியின் போது குலாம்ரெஸா ரெஹ்பேமாவின் எழுத்தணி ஆற்றலை நேரடியாக பார்வையாளர்களுக்கு வெளிக்காட்டவும் அவரது படைப்புக்களுக்கான விளக்கங்களை அவரே வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
.jpg)
9 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago