Super User / 2011 ஓகஸ்ட் 22 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாருக் தாஜுதீன்)
கிறீஸ் பூதங்கள் தொடர்பான வதந்திகளை பரப்பிய குற்றச்சாட்டின் காரணமாக முச்சக்கர வாகன சாரதியொருவரை ஆகஸ்ட் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் முறைப்பாட்டின் பேரில் கொழும்பு முகத்துவாரம் பொலிஸார் கைது செய்திருந்தனர். நேற்று அந்நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தணிகள் இனோகா கமகே மற்றும் சேனக பெரேரா ஆகியோர் வாதாடுகையில், இச்சந்தேக நபர் முகத்துவாரம் முச்சக்கர வாகன தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இக்கைது பேச்சு சுதந்திரத்தை மீறுவதாகும் எனவும் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
அதேவேளை, சந்தேக நபரினால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் கருத்துகள் தொடர்பான இரு ஒலிப்பதிவுகள் தம்மிடமிருப்பதாகவும் அதை தாம் ஆராய வேண்டியிருப்பதாகவும் முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேக நபரை ஆகஸ்ட் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மேலதிக நீதவான் டிக்கிரி ஜயதிலக்க, ஒலிப்பதிவை பரீட்சித்தபின் அடுத்த விசாரணை நடைபெறும் தினத்தில் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago