Super User / 2011 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாருக் தாஜுதீன்)
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி, வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜயரட்ன இன்று நீக்கினார்.
அஸாத் சாலி பதவி உயர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்து, 600,000 ரூபா பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக சுகாதார அமைச்சின் ஊழியர் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து அஸாத் சாலியும் பாத்திமா ரியானா எனும் பெண்ணும் வெளிநாடு செல்வதை தடுக்குமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கடந்த 15 ஆம் திகதி நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இவ்விவகாரம் இன்று விசாரணைக்கு வந்தபோது, அஸாத் சாலியை கைது செய்ய வேண்டுமா என்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை தாம் நாடியிருப்பதாக கொழும்பு குற்றப் பணியகம் தெரிவித்தது. அத்துடன் சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்காத நிலையில், அஸாத் சாலி வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறும் அப்பணியகம் கோரியது.
இதையடுத்து, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்காததால், அஸாத் சாலி வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீதவான் நீக்கினார். இவ்வழக்கு விசாரணை செப்டெம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago