Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாக்குரிமையுள்ள அனைத்து தமிழ் வாக்காளர்களும் வாக்களிப்பில் கட்டாயமாக கலந்துகொள்ள வேண்டும். வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழ் வாக்காளரும், தங்களது வாக்குகளை ஏணி சின்னத்திற்கு வழங்கவேண்டும்.
இதன் மூலமாகவே கொழும்பு மாவட்டத்தில் தலைநகர தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் சக்தியை எடுத்துக்காட்ட முடியும். இதுவே இத்தேர்தல் தொடர்பிலே எனது முதல் கோரிக்கையாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபைக்கான முதன்மை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நேற்று வியாழக்கிழமை மாலை தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்கள் மத்தியிலே உரையாற்றிய போண்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,
'ஒக்டோபர் 8ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினத்தை இன்றே தலைநகர தமிழ் மக்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். கொழும்பில் எனது தலைமையிலும், தெகிவளை - கல்கிஸையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலும், கொலொன்னாவையில் ராஜகுமாரன் தலைமையிலும் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
வாக்குரிமையுள்ள தமிழ் மக்கள் தேர்தல்காலங்களில் வாக்களிப்பிற்கு தேவையான அரைமணித்தியாலத்தை ஒதுக்குவதில் அக்கறை காட்டுவதில்லை. இந்நிலைமை எதிர்வரும் தேர்தலிலே கட்டாயமாக மாறியே ஆகவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் தாய், தந்தை, கணவன், மனைவி, சகோதரன், சகோதரி என்ற வரிசையில் அனைவரும் குடும்பம், குடும்பமாக வாக்களிக்க வேண்டும். ஆண்களும், பெண்களும், வயோதிபர்களும், இளைஞர்களும் வாக்களிக்க வேண்டும். வர்த்தகர்கள், அரச ஊழியர்கள், தனியார்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், உழைக்கும் தொழிலாளிகள் என்ற வரிசையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
தலைநகர பிரதேசத்தில் எமது ஜனநாயக வாக்கு பலத்தின் மூலமாக அரசாங்கத்தையும், எதிர்கட்சியையும் எம்மை திரும்பிப்பார்க்க வைக்கவேண்டும். தமிழர்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாகவும், கிள்ளுக்கீரைகளாகவும் நினைக்கும் பெரும்பான்மை கட்சிகளுக்கு நாம் யார் என்பதை காட்டவேண்டும்.
இந்திய அரசாங்கம் உட்பட சர்வதேச சமூகத்திற்கு தலைநகரத்திலும் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்ற செய்தியை உறுதியுடன் அறிவிக்கவேண்டும். எமது அரசியல் பலத்தை சொந்த நோக்கங்களுக்காக விலைபேசி விற்கும் துரோகிகளுக்கு அவர்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத பாடம் புகட்ட வேண்டும்.
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் என்ற முறையில் நான் தமிழ் மக்களுக்கு நல்லதைத்தவிர வேறெதையும் ஒருபோதும் செய்ததில்லை. எம்முடன் இருந்தவர்கள் எனது முதுகிலே குத்தினார்கள். எம்மால் அரசியல் நன்மைகளை பெற்றுக்கொண்ட பெரும்பான்மை தேசியக் கட்சி எனது நெஞ்சிலே குத்தியது. இவை தலைநகர தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.
எனவே தேர்தலின்போது வாக்களிப்பில் கலந்துகொள்ளும் தமிழ் மக்கள் எமக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. எனவே முதலில் தமிழ் மக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பது முக்கியமானதாகும்.
தேர்தல் தினமான எதிர்வரும் ஒக்டோபர் எட்டாம் திகதியை வாக்களிப்பிற்காக ஒதுக்கி வைக்கும்படி தலைநகர தமிழ் மக்களை இன்றே கேட்டுக்கொள்ளுங்கள். வீடு வீடாக சென்று எனது இந்த செய்தியை தமிழ் மக்களிடம் சொல்லுங்கள். தலைநகரத்திலே வெற்றி எங்களுடையதாகும்."
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago