Super User / 2011 செப்டெம்பர் 01 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பதாகையொன்றில் (கட்அவுட்) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முகத்தை ஸ்பிறே பெயின்ற் மூலம் சேதமாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவரை செப்டெம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.
ஜா-எலயைச் சேர்ந்த ஆர்.ஜி. ரொஷான் மலிந்த எனும் இந்நபர், இப்பதாகையின் மீது பெயின்ற் விசிறிக்கொண்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் அவரின் அரசாங்கத்திற்கும் எதிரான வசனங்களை சிவப்பு நிற பெயின்றில் இவர் எழுதியதாக பொலிஸார் குற்றம் சுமத்தினர்.
சுயதொழில் புரிவோர் சம்மேளனத்தினர் அமைத்த இப்பதாகைக்கு சேதமிழைத்த குற்றத்தையும் இந்நபர் மேற்கொண்டதாக குற்றம் சுமத்திய பொலிஸார், தண்டனைக் கோவையின் 120 மற்றும் 410 ஆவது பிரிவின் கீழ் இந்நபர் குற்றமிழைத்துள்ளதாக கூறினர்.
அத்துடன் கொரியாவில் உரிய விஸா இல்லாமல் தங்கியிருந்ததால் கொரிய நீதிமன்றிலும் இவர் குற்றவாளியாக காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
9 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago
meenavan Thursday, 01 September 2011 10:31 PM
எவ்வளவு காலம் சிறையில் இருக்கவேண்டுமோ?
Reply : 0 0
Ruzy Friday, 02 September 2011 01:08 AM
மக்கள் பணத்தில் கோடி கணக்கில் கட் அவுட் அடிக்காம இருப்பது நலமா இருக்கும்.
Reply : 0 0
ROSHAN Friday, 02 September 2011 01:59 AM
அவர் வெளிய வரவே முடியாதா ?
Reply : 0 0
siraj Friday, 02 September 2011 05:23 AM
அஹ்ஹா கிளம்பிட்டாங்கய்யா? இதுக்கும் அப்படி செய்வாங்களா?
அதுதான் இப்ப புரியுது... எங்கட ஊரிலும் ஒருவர் ஜனாதிபதியுடன் இணைந்து எடுத்த பெணர் அடித்து ஊரெல்லாம் நாட்டி வைத்திருக்கிறார். யாரும் உடைக்க மாட்டாங்க என்றுதான். அவரு தனிய இருந்தா கோவிந்தாதான். அவரு எவருன்னு கேட்பது விளங்குது. ஆனா.. அவரு யாரும்மல்ல.... ஆ ஆ ....அதாவது... அதான்.... ..விளங்கிட்டா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago