Super User / 2011 செப்டெம்பர் 05 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 23ஆவது பேராளர் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட அதியுயர் பீடம் முதற் தடவையாக நாளை சந்திக்கவுள்ளதாக அக்கட்சியின் பிரதி பொது செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர சபைக்கான முதன்மை வேட்பாளருமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
இந்த விசேட கூட்டம் கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.
கடந்த மே 15ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 23ஆவது பேராளர் மாநாடு வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது 63 உறுப்பினர்களை கொண்ட அதியுயர் பீடம் தெரிவு செய்யப்பட்டதுடன் கட்சியின் அரசியல் பீடம் கலைக்கப்பட்டது.
9 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago