2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஆண்களுக்கு வாக்களிப்பதற்குமுன் பெண்களுக்கு வாக்களியுங்கள் : மனோ

Super User   / 2011 செப்டெம்பர் 09 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 'எமது கட்சியின் சார்பாக ஏணிச் சின்னத்தில் கொழும்பு மாநகரசபைக்கு போட்டியிடும் மஞ்சுளா பெருமாளையும், தெகிவளை-கல்கிசை மாநகரசபைக்கு போட்டியிடும் நந்தினி விஜயரட்ணத்தையும் வெற்றி பெறச் செய்து கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மகளிர் தலைமையை ஏற்படுத்துவோம்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

கட்சி தலைமையகத்தில் தம்மை சந்தித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் மகளிர் அணி அங்கத்தவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

'பெண்களுக்கு தலைமைத்துவத்தை வழங்குங்கள் என பல அரச சார்ப்பற்ற நிறுவனங்களும், பெண்கள் அமைப்புகளும் வலியுறுத்துகின்றன. இதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் தலைமைத்துவத்திற்கு ஏற்ற விதத்தில் பெண்கள் தயார் செய்யப்படுவதில்லை. தேர்தல் காலங்களில் பல கட்சிகள் பெண்களின் பெயர்களை வெறுமனே பட்டியலில் சேர்த்துக்கொள்கிறார்கள். இதற்கு பிரதான காரணம் சமூகத்தலைமைக்கும், தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் நமது பெண்கள் முன்வருவதில்லை.

 இன்று எமது கட்சியின் சார்பாக மஞ்சுளா பெருமாளும், நந்தினி விஜயரட்ணமும் முன்வந்து போட்டியிடுகின்றார்கள். மஞ்சுளா கொழும்பு மாநகர சபைக்கும், நந்தினி தெகிவளை-கல்கிசை மாநகரசபைக்கும் தெரிவு செய்யப்படவேண்டும். அதற்காக தமிழ் மக்கள் மத்தியிலே  சென்று நீங்கள் வாக்குச் சேகரிக்க வேண்டும்.

இந்த இரண்டு பெண் வேட்பாளர்களும் தகைமை வாய்ந்தவர்கள். படித்த பட்டதாரிகள். மஞ்சுளா ஒரு பட்டதாரி ஆசிரியையாக கொட்டாஞ்சேனை பகுதியில் அமைந்துள்ள பிரபலமான பெண்கள் கல்லூரியில் பணியாற்றுகின்றார். நந்தினி உளவியல் ஆலோசகராக தெகிவளை-கல்கிசை பகுதியிலே பணியாற்றுகின்றார். எனவே இவர்கள் இருவரும் வெற்றி பெற்று கொழும்பு மாவட்டத்தின் தமிழ் பெண்களை இந்த இரண்டு முக்கிய மாநகரசபைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.
 
ஆண்களுக்கு வாக்களிப்பதற்கு முன்னர், இந்த இரண்டு பெண்களுக்கும் தமிழ் தாய்மார்கள்  தங்களது விருப்பு வாக்கை வழங்க வேண்டும். கொழும்பிலே போட்டியிடும் எனக்கு வாக்களிப்பதற்கு முன்னர் மஞ்சுளா பெருமாளுக்கு வாக்களிக்கப்படுமானாலும்கூட நான் மகிழ்ச்சியடைவேன். அதேபோல் தெகிவளை-கல்கிசை மாநகரசபை பிரதேசத்தில் வாழும் தமிழ் வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் நந்தினி விஜயரட்ணம் அவர்களுக்கு தங்களது முதல் விருப்பு வாக்கை  வழங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் முதல் தமிழர்கள் தங்களது வாக்கை ஏணிச் சின்னதிற்கு வழங்கவேண்டும்.
 
இந்த எனது செய்தியை ஜனநாயக மக்கள் முன்னணியின் மகளிர் அணியினர் கொழும்பு, தெகிவளை, கல்கிசை பகுதிகளுக்கு எடுத்துச்சென்று பிரசாரம் செய்ய வேண்டும்.


  Comments - 0

  • Nishanthan Saturday, 10 September 2011 03:32 AM

    தனக்கு வாக்களிக்க முதல் பெண்களுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னதை பாராட்டலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X