2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

திருமறை கலா மன்றத்தின் நாடக கதம்பம் இராமகிருஸ்ண மிஷன் மண்டபத்தில்

Super User   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

கொழும்பு, வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிஷன் மண்டபத்தில் திருமறை கலா மன்றத்தின் மாபெரும் நாடக கதம்பம் செப்டம்பர் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

24ஆம் திகதி மாலை 6.45 மணிக்கு அசோக சக்கரவர்த்தியின் வரலாற்றை கூறும் அசோக எனும் வார்த்தைகளற்ற நாடகம் மேடை ஏற்றப்படுகிறது. இந் நாடகத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கும் திருமறை கலா மன்றத்தின் கிளைகளை சேர்ந்த பல்லின கலைஞர்கள் பங்குபற்றவுள்ளனர்.

25ஆம் திகதி ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களின் கூத்து மரபுகளையும் உள்ளடக்கிய அற்றை திங்கள் முல்லைக்கு தேர்ஈந்த பாரி மன்னனின் வீர வரலாற்றை சித்தரிக்கும் வகையில் அமைந்த கூத்துருவ நாடகம் மாலை 6.30 மணிக்கு அரங்கேற்றப்படுகிறது என என திருமறை கலா மன்றத்தின் விசேட வள ஆளுனர் வள்ளுவன் சுவாமிநாதன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X