Super User / 2011 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
நடமாடும் விபசார குழுவொன்றுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒரு சிறுமி உட்பட இருவர் கொள்ளுபிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபசார குழுவொன்றை நடத்தியதுடன் சிறுமியொருவரை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேக நபரை கொழும்பு கோட்டை நீதவான் லக்னா ஜயரட்ன முன்னிலையில் கொள்ளுபிட்டிய பொலிஸார் ஆஜர் படுத்தினர்.
இவ்விபசார நிலையத்தை முற்றுகையிடுவதற்காக மாறுவேடத்தில் சென்ற உத்தியோகஸ்தரிடம் 2000 ரூபா கட்டணம் வசூலித்ததாகவும் 17 வயதான மேற்படி சிறுமியை கொள்ளுபிட்டி கரையோர வீதியில் வைத்து அந்தஉத்தியோகஸ்தரிடம் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்பின் மேற்படி இரு சந்தேக நபர்களை கைது செய்ததுடன் விபசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனமொன்றையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
பொலன்னறுவையைச் சேர்ந்த எஸ்.ஜி. நிஹால் கருணாரட்ன எனும் இந்நபர், போலி சாரதி அனுமதிப்பத்திரமொன்றை பொலிஸாரிடம் சமர்ப்பித்ததாகவும் அதன் மூலம் அவர் தண்டனைக்குரிய மற்றொரு குற்றமிழைத்துள்ளதாகவும் பொலிஸர் குற்றம் சுமத்தினர்.
இந்நிலையில் பிரதான சந்தேக நபரை செப்டெம்பர் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், 17 வயதான மேற்படி சிறுமியை செப்டெம்பர் 22 ஆம் திகதிவரை இரட்சணிய சேனையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago
ramzeen Saturday, 17 September 2011 04:25 PM
நல்லது செய்தால் பாராட்டுவோம்.
Reply : 0 0
Mathews Sunday, 18 September 2011 05:11 PM
தூக்கு தண்டனை கட்டாயமாக்கப்பட வேண்டும். தண்டனைகள் பலமடைந்தால் குற்றம் குறைவடையும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago