Super User / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாருக் தாஜுதீன்)
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் சமையல் பணியாளராக வேiசெய்த இந்திய பிரஜையின் மரணம் தூக்கிட்டு தற்கொலை செய்ததால் ஏற்பட்டது என கொழும்பு நகர திடீர் மரண விசாரணை அதிகாரி நடத்திய விசாரணையின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனிவ்ன அலுவலகத்தில் சமையல் வேலைசெய்ய இந்தியாவிலிருந்து வந்த சாமிநாதன் முத்து சந்தனம் எனும் இந்நபர், சிறந்த சமையல்காரராக காணப்பட்டதால் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன ஹோட்டன் பிளேஸிலுள்ள தனது வீட்டில் இவரை சமையல் பணியாளராக சேர்த்துக்கொண்டார் என மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சாட்சிகள் கூறினர்.
நான்கு நாட்களுக்கு முன்னர இந்தியாவிலிருந்து திரும்பிய இவர், நல்ல மனநிலையில் காணப்படவில்ஐ எனவும் எப்போது யோசித்துக்கொண்டிருந்தார் என்றும் சாட்சியங்கள் தெரிவித்தன.
இவர் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்ததை செப்டெம்பர் 30, ஆம் திகதி 4.30 மணியளவில கண்டவர்கள் இவரை வைத்தியசாலைககு கொண்டு சென்றபோத இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டதாக சாட்சிகள்தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி ராஹுல் ஹக் கழுத்தில் சுருக்கிட்டு, தொங்கியதால், விளைந்த மரணம் என தீர்ப்பளித்தார்.
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago