2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் களைகட்டியுள்ள நத்தார் வியாபாரம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 16 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கே.என்.முனாஷா)

சின்ன ரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் நத்தார் மற்றும் புது வருட வியாபாரம் களைகட்ட ஆரம்பித்துள்ளது. நகரின் வரத்தகப் பிரதேசத்தில் தற்காலிக நடைபாதை கடைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்மஸ் மரங்கள், வாழ்த்து மடல்கள், அலங்காரப் பொருட்;கள், விளையாட்டுப் பொருட்கள், ஆடைவகைகள், பரிசுப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் என பலவிதமான பொருட்கள் நடைபாதை கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்துடன். நகரில் உள்ள வாத்தக நிலையங்கள் பலவற்றில் மலிவு விற்பனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையான பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரின் வரத்தகப் பகுதிக்கு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

நடைபாதை கடைகள் சிலவற்றில் கிறிஸ்மஸ் மரங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை செயய்யப்படுவதையும் பொதுமக்கள் அவற்றை கொள்வனவு செய்வதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X