Kogilavani / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.என்.முனாஷா)
சிலாபத்தில் மீனவர் படுகொலை, மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நீர்கொழும்பு நகரில் ஆர்பாட்ட பேரணி இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பாட்ட பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகே, சுதந்திரத்திற்கான அரங்க அமைப்பின் முக்கியஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தளுபத்தை தேவாலயம் முன்பாக முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதியூடாக நகர மத்திக்கு பிரவேசித்தது. அங்கிருந்து கடற்கரைத் தெருவுக்கு சென்று தேவாலயம் முன்பாக வந்தடைந்தது.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் ஆகியோர் ஹெமில்டன் வாவியுனூடாக படகில் பயணித்து தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
54 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
2 hours ago