Super User / 2012 பெப்ரவரி 18 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கைத்தொழில் பேட்டைகளில் காணப்படுகின்ற அடிப்படை தேவைகள் தொடர்பில் இன்று சனிக்கிழமை கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர்கள், கைத்தொழிலாளர்கள், அமைச்சு அதிகாரிகள், இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஏக்கல, பன்னல, பல்லேகல, ஹொரணை, பாணந்துறை போன்ற பகுதிகளில் செயற்பட்டு வருகின்றன கைத்தொழில் பேட்டைகள் பல்வேறு அடிப்படை வசதிகள் குறைபாடாக காணப்படுவதாக கைத்தொழிலாளர்களால் பல்வேறு கோரிக்கைகள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த கைத்தொழில் பேட்டைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் நேரடி விஜயங்களை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்துள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் மேலும் ஆராய்ந்;து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக உயர்மட்டக் குழுவொன்றை நியமித்தார்.
இக்குழு முன்வைத்துள்ள அறிக்கை தொடர்பில் இன்று ஆராயப்பட்டதுடன் இந்நிகழ்வில் கலந்துகொண்ட கைத்தொழிலாளர்களினதும் துறைசார் அதிகாரிகளினதும் கருத்துக்களும் கேட்டறியப்பட்டன.
அத்துடன் யாழ். அச்சுவேலி பகுதியில் கைத்தொழில் பேட்டை விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொண்டு வருகினறமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago