Super User / 2012 பெப்ரவரி 20 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.என்.முனாஷா)
கடற்றொழில் நடவடிக்கைகளிலிருந்து கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி முதல் இருந்து ஒதுங்கி இருந்த நீர்கொழும்பு மீனவர்கள் இன்று திங்கட்கிழமை பிற்பகல் தமது எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட தீர்மானித்துள்ளதாக, நீர்கொழும்பு கடற்கரை வீதி மற்றும் குடாபாடுவ ஐக்கிய மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு மாநகர சபையில் பிரதி அமைச்சர் சரத் குணரட்ன மற்றும் மேல் மாகாண மீன்பிடி அமைச்சர் நிமல் லன்சா ஆகியோருடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறித்த சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
சிறிய ரக படகுகள் மூலம் மின் பிடித்தலில் ஈடுபடும் நீர்கொழும்பு மீனவர்களுக்கு நாளை முதல் 25 ரூபா விலை குறைக்கப்பட்டு 81 ரூபாவுக்கு மண்ணெண்ணெய்யை மீனவ கூட்டுறவு சங்கங்களின் எரிபொருள் விற்னை நிலையங்கள் ஊடாக வழங்கள் என்ற தீர்மானத்தையடுத்தே எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோனையின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இதற்கான சுற்று நிருபத்தை தயாரித்துள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago