Super User / 2012 பெப்ரவரி 25 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
நட்சத்திர ஹோட்டலிலிருந்து பிரண்டி போத்தலொன்றை திருடியவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 1500 ரூபா அபராதமும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.
17.09.2010 ஆம் திகதி,கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலிலிலிருந்து 23,000 ரூபா பெறுமதியான பிரண்டி போத்தலை திருடிய குற்றச்சாட்டில் சாமர காசியப்பவை கொள்ளுபிட்டி பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
ஹோட்டல் விருந்தினர்போல் ஹோட்டலுக்கு வந்து அவர் ஹோட்டல் ஊழியர் ஒருவரின் பாதுகாப்பிலிருந்த பிரெண்டி போத்தலை எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்நபர் குற்றவாளியாக காணப்பட்டதையடுத்து அவருக்கு 1500 ரூபா அபராதமும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனையும் விதித்து நீதவான் கனிஷ்க விஜேரட்ன தீர்ப்பளித்தார்.
8 minute ago
25 minute ago
18 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago
18 Feb 2026