Super User / 2012 பெப்ரவரி 25 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளையாட்டுச் சீருடைகளை விநியோகிப்பதாக வாக்குறுதியளித்து, அமைச்சுப் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்குச் சொந்தமான 500000 ரூபா பணத்தை மோசடி செய்ததாக தையல் நிலைய உரிமையாளர் ஒருவர் மீது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவையைச் சேரந்த தையல் நிலைய உரிமையாளரான சமிந்த விமலசேகர மீது இளைஞர் விவகார, திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமைப் பாதுகாப்பு உத்தியோகஸ்தரான பிரதம இன்ஸ்பெக்டர் அருணஸ்ரீ சூரியபண்டார இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
இதேவேளை சந்தேக நபர் 200,000 ரூபாவை திருப்பிக்கொடுத்துள்ளதாகவும் எஞ்சிய தொகையை தவணை அடிப்படையில் செலுத்துவார் எனவும் சந்தேக நபரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜயந்த டயஸ் நாணயக்கார கூறினார்.
நீதவான் கனிஷ்க விஜேரட்ன இவ்வழக்கை மார்ச் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். (லக்மால் சூரியகொட)
54 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
2 hours ago