Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 27 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச ரீதியில் நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் தற்போது ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு மேலும் அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நேற்று முதல் தீர்மானித்துள்ளதாக கம்பஹா மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர் சங்கமும் நீர்கொழும்பு ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர் சங்கமும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.
கம்பஹா மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தலைவர் டி.யூட் பெரேராவும் நீர்கொழும்பு ஆழ்கடல் மீன்பிடி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தலைவர் ஜோசப் பீட்டர் பெர்னாந்துவும் கையெழுத்திட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'இந்த இரு சங்கங்களும் இணைந்து மூன்று தீர்மானங்களை எடுத்துள்ளன.
1. சர்வதேச ரீதியில் நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் தற்போது விடுக்கப்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு மேலும் அசௌகரியங்களை ஏற்படுத்தாமை.
2. தற்போது நீர்கொழும்பு களப்பு மற்றும் நீர்கொழும்பு துறைமுகத்தில் அதிக எண்ணிக்கையான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை. தொடர்ந்தும் அவைகளை நிறுத்தி வைப்பதில் அசௌகரியம் ஏற்பட்டுள்ளமை.
3. ஆழ்கடல் மீன்பிடித் துறையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பகிஷ்கரிப்பு காரணமாக தொழிலில் ஈடுபடாமையினால் அவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளமை ஆகியனவே இத்தீர்மானங்கள் ஆகும்.
எவ்வாறாயினும் எதிர்வரும் மாதங்களில் மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள சகல மீனவ சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கும் முடிவெடுத்துள்ளன' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
54 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
2 hours ago