Super User / 2012 பெப்ரவரி 27 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
நடமாடும் விபசார வலையமைப்பொன்றை நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சீனப் பெண்கள் இருவரும் இலங்கையர் ஒருவரும் பிணையில் செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று அனுமதித்தார்.
தலா 100,000 ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்வதற்கு இவர்களை அனுமதித்த நீதவான் கனிஷ்க விஜேவர்தன, சீனப் பிரஜைகள் இருவரும் நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுக்குமாறு குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.
மேற்படி சீனப் பெண்கள் சார்பாக ஆஜரான வழக்குரைஞர், அப்பெண்கள் மீதான குற்றச்சாட்டை நிராகரித்ததுடன் அவர்கள் இலங்கைக்கு பயணிகளாக வந்தவர்கள் எனக் கூறினார்.
பிரதான சந்தேக நபரான இலங்கையைச் சேர்ந்த ஆணும் சீனப் பெண்ணகளும் கொள்ளுபிட்டி பொலிஸாரினால் கடந்த 23 மாதம் திகதி இரவு கைது செய்யப்பட்டனர். இவ்விபசார நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வாகனமொன்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.
54 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
2 hours ago