Kogilavani / 2012 பெப்ரவரி 28 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(க.கோகிலவாணி)
கியூபா, ஹவானா நகரில் உலக நாடுகளின் பங்குப்பற்றுதலுடன் 'ஹவானா பெனாயில் ஓவிய கண்காட்சி 2012' எதிர்வரும் மே மாதம் 11 முதல் ஜுன் மாதம் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த ஓவியர்களுக்கும் இக்கண்காட்சியில் பங்குப்பற்றுவதற்கான வாய்ப்பை கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடன் கலசார அலுவல்கள் திணைக்களம் வழங்கியுள்ளது.
இவ் ஓவியக் கண்காட்சியில் பங்குப்பற்ற விரும்புபவர்கள் தமக்கு பிடித்த தலைப்பில் ஓவியம் ஒன்றை மட்டும் வரைந்து அதனை குறுந்தகட்டில் பதிவுசெய்து பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, வரையப்பட்ட ஓவியத்தின் பெயர் என்பவற்றை குறிப்பிட்டு நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் 'செயலாளர்‚ ஓவிய மற்றும் சிற்ப குழு‚ கலாசார அலுவல்கள் திணைக்களம்‚ 8 ஆம் மாடி‚ செத்சிறிபாய‚ பத்தரமுல்ல' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 011-3188873 என்ற முகவரிக்கு தொடர்புக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
இப்போட்டி திறந்த மட்டத்தில் நடைபெறுகிறது. கடந்த வருடம் இடம்பெற்ற மேற்படி கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த 3 கலைஞர்கள் பங்குப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago