2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

'கீழைத்தேய வாத்திய இசைச் சங்கமம்'

Kogilavani   / 2012 பெப்ரவரி 28 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் 100 இளம் வாத்திய கலைஞர்கள் ஒரே மேடையில் சங்கமிக்கும் தேசிய நிகழ்வான 'கீழைத்தேய வாத்திய இசைச் சங்கமம்' நிகழ்வு எதிர்வரும் 6 ஆம் திகதி மாலை பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

இலங்கையின் மூவினங்களையும் பிரதிபலிக்கும் வகையில் கலைஞர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மிகவும் பின்தள்ளப்பட்ட பிரதேசங்களை சேர்ந்த கலைஞர்கள் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடம் சிறப்பான பயிற்சியைப் பெற்ற நிலையில் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இந்தியா, பங்களாதேஷ், நோர்வே, பலஸ்டீன் ஆகிய நாட்டுக் கலைஞர்கள் இவ்விசை நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X