A.P.Mathan / 2012 மார்ச் 01 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிப்பாவை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு வேளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலைய போக்கு வரத்துப்பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மரணமடைந்திருப்பவர் கஹட்டகஸ்தகிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திவுள்வௌ கிராமத்தைச் சேர்ந்த எம்.ஹாஷpம் (வயது-47) என தெரியவருகிறது.
கஹட்டகஸ்திகிலிய நகரிலிருந்து இரவு வேளையில் மோட்டார் சைக்கிலில் பயணித்துக்கொண்டிருந்த இவர், கிரிப்பாவை பகுதியில் பாதையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் எதிர்பாராத விதமாக மோதியதால் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இவரை கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் உடன் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி இவர் மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலைய போக்கு வரத்துப்பிரிவு பொலிஸார் நடாத்தி வருவதாகவும் மேலும் தெரிவித்தனர்.
54 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
2 hours ago