Super User / 2012 மார்ச் 07 , பி.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமாதானம் நிரந்தரமாக நிலைப்பட பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தின இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் என்ற வகையில் சர்வதேச மகளிர் தினத்திற்கு எனது வாழ்த்துச் செய்தியினை வழங்குவதையிட்டு புளகாங்கிதம் அடைகின்றேன்.
உலக மகளிர்களை சிறப்பிக்கும் வகையில் இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில், இம்முறை 'பெண் பிள்ளைகளைப் பாதுகாப்போம்' எனும் தொணிப்பொருளில் அலரி மாளிகையில் மகளிர்களிரை கௌரவிக்கும் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் இலங்கைப் பெண்களின் நலன்புரி மற்றும் அவர்களின் உரிமைப் பாதுகாப்பு என்பனவற்றில் எமது ஈடுபாட்டை மிகவும் சுருக்கமாக விபரிக்க விரும்புகின்றேன்.
எமது அமைச்சின் பிரதான நோக்கங்களாவன:
• இலங்கைப் பெண்களின் சமவுரிமை, பொருளாதார, சமூக, அரசியல், மற்றும் கலாச்சார ரீதியாக அவர்களுக்கான சந்தர்ப்பத்தினை வழங்குதல்.
• மகளிர்கள் எதிர்நோக்கும் பிரதான இடையூறுகளினை எதிர்கொள்வதற்கு பெண்களை வலுவூட்டல்.
• பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசியல் ரீதியாக சட்டங்களை வலுப்படுத்துவதுடன் கற்பழிப்பு, வேறுபாடுகள் மற்றும் சமூகரீதியான அநீதிகளை ஒழித்துக்கட்டுதல்.
சச்சரவுகளுக்கு மாத்திரம் பெண்கள் முகம் கொடுப்பவர்கள் அல்லர். ஆனால் அவர்கள் சமாதானத்தின் முன்னோடிகள். சமாதானம் நிரந்தரமாக நிலைப்பட வேண்டுமானால் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே எனது அவாவாகும்.
மீண்டும் உலகப் பெண்களின் பாதுகாப்புக்காகவும் நலன்புரிக்காகவும், 'கற்பழிப்பை உடனே நிறுத்து' என்ற வேண்டுகோளும் பலமாக ஒலிக்கும் என்று கூறி சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர்.என்ற வகையில் எனது ஆசிச் செய்தியினை வழங்குவதனையிட்டும் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார்.
53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago