2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

சடலங்களை இயன்ற வரை துரிதமாக உறவினர்களிடம் கையளிப்பது தொடர்பில் பேச்சு

Super User   / 2012 மார்ச் 28 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் கொழும்பு பிரதான சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஆனந்த சமரசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

சடலங்களை இயன்ற வரை துரிதமாக உறவினர்களிடம் கையளிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் பிரேத பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் சடலங்களை ஒழுங்கான முறையில் கையளிப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் கொழும்பு பிரதான மரண விசாரணை அதிகாரி எட்வேர்ட் அஹங்கமவிற்கும் இடையிலான முன்னர் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது சடலங்களை இயன்ற வரை துரிதமாக உறவினர்களிடம் கையளிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .