Super User / 2012 மார்ச் 30 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதகரகமொன்றைச் சேர்ந்த பெண்ணொருவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்றபோது வைத்தியரினால் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுமாறு கொள்ளுபிட்டிய பொலிஸாருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.கை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு தான் சென்றதாகவும் மருத்துவமனையில், சோதனை அறையொன்றுக்கு தான் அழைத்துச்செல்லப்பட்டதாகவும் அங்கு வைத்தியர் ஒருவர் தன்னை முறையற்ற விதமாக தொட்டதன்மூலம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அப்பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அந்த சோதனை அறையில் பெண் தாதியர் எவரும் இருக்கவில்லையென்றும் வைத்தியர் இவ்வாறான விதமமாக சோதனை மேற்கொள்கிறார் என்பது புரியாமல் தான் சங்கடத்துக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைக் குறிப்புகளை சட்டமா அதிபருக்கு அனுப்புமாறு நீதவான் கனிஷ்க விஜேரட்ன பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.18 Feb 2026
18 Feb 2026
18 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Feb 2026
18 Feb 2026
18 Feb 2026