2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

உயர் கல்வியின் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 04 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுபுன் டயஸ்)


உயர்க் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பதில்லை எனவும் மாறாக உயர்க்கல்வி முறைமையை தனியார்மயப்படுத்த முயன்று வரவதாகவும் மருத்துவபீட மாணவர்கள் குழு நேற்று குற்றஞ்சுமத்தியுள்ளது.

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பங்குபற்றிய ஆர்ப்பாட்டமொன்று இன்று நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கத்தின் பல்வேறு தோல்விகள், மாலபேயில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றை அமைத்தமையால் உயர்க்கல்வி முறைமைக்கு விளைந்துள்ள கேடு என்பவற்றை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மருத்துவபீட மாணவர்களின் நடவடிக்கைக்குழு, மாலபே மருத்துவக் கல்லூரியில் ஒவ்வொருவரிடமும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர்களின் பெற்றோர்கள் இதுவரை அங்கீகரிக்கப்படாத மருத்துவப் பட்டத்திற்காக பல மில்லியன் ரூபாய்களை செலவளித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியது.

இவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என நடவடிக்கை குழு ஏற்பாட்டாளர் கூறினார்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது ஆரம்பத்திலிருந்தே பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது.

தற்போதுள்ள மருத்துவப் பீடங்களை அபிவிருத்தி செய்து அங்கு வெளிவாரி மாணவர்களை இணைத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் மருத்துவ பீடங்களை முன்னேற்ற முடியும் என அவர் கூறினார்.

சுகாதார அமைச்சினால் கடந்த செப்டெம்பரில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியால் வழங்கப்படவுள்ள எம்.பீ.பீ.எஸ். பட்டத்தின் சட்டவலு, தரம் என்பன குறித்து ஆராயவென நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அண்மையில் கையளித்துள்ளது. (படங்கள்:குஸான் பத்திராஜ)
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .