2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் மூன்று நபர்கள் நீர்கொழும்பில் கைது

Super User   / 2012 ஏப்ரல் 15 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் திஸாஹேவத்த - கமேகடே வீதியில் வைத்து நேற்று சனிக்கிழமை இரவு 10.50 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கட்டான, சீனக்குடா மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ரிவால்வர்கள், 12 ரவைகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுஇ ஒரு இலட்சத்து 4950 ரூபா பணம்இ இரு ஜோடி வாகன இலக்க தகடுகள் மற்றும் உடைகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .