2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

'தமிழ் கைதிகளின் உடமைகள் காணாமல் போனமை தொடர்பில் நடவடிக்கை இல்லை'

Super User   / 2012 ஏப்ரல் 15 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

புதிய மகசின் சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது தடுத்துவைப்பட்டிருந்து தமிழ் கைதிகளின் உடைமைகள் காணாமல் போனமை தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரிடம் சந்திரசிறி கஜதீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கடந்த ஜனவரி 24ஆம் திகதி புதிய மகசீன் சிறைச்சாலையில் சிங்கள கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தின் போது 58 தமிழ் அரசியல் கைதிகள் அங்கிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இவ்வாறு மாற்றப்பட்ட சமயம் அவர்களின் உடமைகள் சிறைச்சாலையின் களஞ்சிய அறையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு இடம்பெற்ற கலவரத்தினை தொடர்ந்து அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் தங்க நகைகள், அடையாள அட்டைகள், மணிக்கூடுகள், வானொலிப்பெட்டிகள், கையடக்க தொலைபேசிகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள், டோச் லைடகள் பணம் மற்றும் வோக்மன் செட்கள் ஆகியன தாலைந்துவிட்டதாக சிறைச்சாலை நிர்வாகத்தினர் கைதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கைதிகளினால களஞ்சிய அறை எரிக்கப்பட்ட போது குறித்த பொருட்களும் எரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் சிறைச்சாலைக்குள் கைதிகள்  வரும்போது அவர்களின் உடமைகளை சிறைச்சாலை அதிகாரிகள் பெறும்போது அதற்கான முழுப்பொறுப்பையும் சிறைச்சாலை அதிகாரிகளே பெற வேண்டும்.

அவ்வாறு பொருட்கள் தொலைந்தால் அவற்றுக்கான பொறுப்பை சிறைசாலை அதிகாரிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இது தொடர்பில் இதுவரையில் கைதிகளுக்கு எதுவித கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை என கைதிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் முக்கியமானவையாக கருதப்படும் அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் போன்றவற்றையாவது பெற்றுக்கொடுப்பதற்கு இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஆகியோர் இது தொடர்பில் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரிக்கை விடுக்கின்றேன்" என்றார்.

  Comments - 0

  • Nigan Monday, 16 April 2012 05:34 PM

    அய்யா! உரிமையே காணாமல் போச்சு, உடமை எங்கனம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X