2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சீதுவை தடுகம் ஓயவில் காணாமல் போன இருவரது சடலங்கள் மீட்பு

Super User   / 2012 ஏப்ரல் 16 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

சீதுவை - தண்டுகம் ஓயாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தோணி கவிழ்ந்ததில் காணாமல் போன இரு இளைஞர்களினதும் சடலங்கள் இன்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு களப்பு பகுதிக்கு அண்மித்தாக உள்ள கடோலான தாவரங்களையும் காட்சிகளையும் பார்வையிடுவதற்காக சென்ற ஐந்து பேர் கொண்ட குழு பயணித்த தோணி கவிழ்ந்துள்ளது.

இதன்போது தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய ஐவரில் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆயினும் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவர்களது சடலங்களே இன்று மாலை மீட்கப்பட்டது.

பள்ளியவத்த – அக்கரகம, கொடகமுவ பிரதேசத்தை சேர்ந்த ரொசேன் சர்வங்க (28 வயது) மற்றும் ஜா-எல, கனுவக பிரதேசத்தை சேர்ந்த மலிந்த விக்ரம சுரேந்ர (24 வயது) ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர். பிரேத பரிசோதனைக்காக இவர்களின் சடலங்கள் நீரகொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X