2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

திருட்டுக் குற்றச்சாட்டில் கைதான தாயும் மகளும் பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தாயையும் மகளையும் 200,000 ரூபா சரீரப்பிணையிலும் 3,000 ரூபா ரொக்கப்பிணையிலும் நீர்கொழும்;பு நீதவான் நேற்று விடுதலை செய்தார்.

இவர்கள் இருவரும் நீர்கொழும்பு நகரிலுள்ள சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் பாங்கில் சென்று  5,175 ரூபா பெறுமதியான பால்மா, சீஸ், பிஸ்கட், பாடசாலை உபகரணங்கள் ஆகிய பொருட்களை திருடி தமது உள்ளாடைகளுக்குள் மறைத்துவைத்துக்கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் விற்பனை நிலையத்திலிருந்த பாதுகாப்பு ஊழியர்களால் பிடிபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். 

கைதுசெய்யப்பட்ட  இப்பெண்ணின்; கணவர் வெளிநாட்டில் தொழில் புரிவதாகவும்; அவர் குடும்பத்தை கவனிப்பதில்லை எனவும் விசாரணையின்போது தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X