2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பிக்குகள் கொலைச் சந்தேக நபர்கள் இருவரை சாட்சிகள் அடையாளம் காட்டினர்

Super User   / 2012 ஏப்ரல் 20 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.பாருக் தாஜுதீன்)

கோட்டை ரஜமஹா விகாரையில் மார்ச் 20 ஆம் திகதி பிக்குகள் இருவரை கொன்றவர்கள் என இரண்டு சந்தேக நபர்களை நேரில் கண்ட 5 சாட்சிகள் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டினர்.

இந்த அடையாள அணிவகுப்பு நுகேகொடை பதில் நீதவான் திஸ்ஸ விஜேரத்ன முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது,  மார்ச் 20 ஆம் திகதி பி.ப 9.30 மணிக்கு வண. பண்டித்த பிட்டிகல கினரத்ன தேரர், வண பொலரஸ்கமுவ குணேரத்ன தேரர் ஆகிய இருவரினதும் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என  மகரகமவை சேர்ந்த பத்திராகே ஹர்ஷா மஞ்சுசிரி மனிக்கீர்த்தி பெரேரா மற்றும் தனமன்விலையை சேர்ந்த நம்முனி ஆராச்சிகே சுரேஷ் சானக ஆகியோரை  ஒரு பிக்கு, ஒரு பெண் அடங்களாக ஐந்து பேர் இனம் காட்டினர்.

இரண்டாவது சந்தேக நபரான நம்முனி ஆராச்சிகே சுரேஷ் சானக இரண்டு பிக்குகளையும் கத்தியால் குத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதலாவது, சந்தேக நபர் மனிக்சிரி பெரேரா கொலைக்கு உடந்தையாக இருந்தவர் என பொலிஸாரால் விசாரணைகள் மூலம் அறியப்பட்டவர் ஆவார்.

நேரில் கண்ட சாட்சியங்களான 6 பேரில் பெண்ணொருவரை தவிர ஏனைய 5 பேரும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டினர். அடையாள அணிவகுப்பின்போது சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி எவரும் ஆஜராகவில்லை. சந்தேக நபர்களை மே 4 வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் பணித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X