2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

போலி கடவுச்சீட்டுடன் மத்திய கிழக்கிற்கு செல்ல முயன்ற யுவதி கைது

Super User   / 2012 ஏப்ரல் 24 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மத்திய கிழக்குக்கு செல்ல முயன்ற 21 வயதான யுவதியொருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்ப்பட்டார்.

இப்பயணத்திற்கு உதவி செய்த நபர் ஒருவரும் விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இப் பெண் பிட்டகோட்டே பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவராவார். பயணத்திற்கு ஏற்பாடு செய்த நபர், வெல்லம்பிட்டியவை வசிப்பிடமாகக் கொண்டவர்.

இப்பெண் தொழில்வாய்ப்புக்காக மத்திய கிழக்கிற்கு செல்ல முற்பட்டதாக இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்புப்பணியகம் தெரிவித்துள்ளது. இப்பெண் போலி கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முற்பட்டமை குறித்து  இப்பணியகத்திற்கு விமான நிலைய பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டது.

அதேவேளை இவரை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்ற முகவர், சில வருடங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் தடை செய்யப்பட்டவர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

தடைவிதிக்கப்பட்ட பின்னரும் இவர் பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவந்துள்ளார்.  இவரினால் ஏமாற்றப்பட்ட பெண்கள் பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சந்தேக நபர்கள் இருவரையும் மே 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X