2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பொது இடங்களில் குருதி அமுக்கத்தை அளவிடும் கருவிகள் பொருத்த நடவடிக்கை

Super User   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருதி அமுக்கத்தை அளவிடும் கருவிகளை கொழும்பு நகரின் பொது இடங்களில் இலங்கை அரசாங்கம் பொருத்தவுள்ளது.

முதற்கட்டமாக இத்தகைய ஐந்து கருவிகளை  கொழும்பில் பொருத்தவுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் டபிள்யூ.எம்.டி. வன்னிநாயக்க கூறியதாக ஸின்ஹுவா தெரிவித்துள்ளது.

தொற்றுநோய்கள் பலவற்றை கட்டுப்படுத்துவதற்கு இலங்கையினால் முடிந்துள்ளது என வன்னிநாயக்க கூறினார். எனினும் உயர் குருதி அமுக்கம் போன்ற தொற்றா நோய்கள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

மாரடைப்பு, நீரிழிவு, உயர் குருதி அமுக்கம், சிறுநீரக நோய்கள், சுவாச நோய்களால் தினமும் சராசரியாக 350 இலங்கையர்கள் இறப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் மேற்படி 5 குருதி அமுக்க கருவிகள் இடங்களில் பொருத்தப்படும். அதன்பின் மேலும் பல கருவிகள் ஏனைய இடங்களில் பொருத்தப்படும் என வன்னிநாயக்க தெரிவித்தார்.

வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவு முறைகள், புகையிலை மற்றும் மதுபாவனை, உடற்பயிற்சின்மை முதலானவை தொற்றாநோய்கள் அதிகரிப்புக்கு காரணம் என சுகாதார அமைச்சின் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் கடந்த 50 வருடகாலத்தில் இதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை 3 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக அதிகரித்துள்ளது எனவும் தொற்றுநோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை 24 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் உலக வங்கி கடந்த வருடம் தெரிவித்தது. (ஐ.ஏ.என்.எஸ்.)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X