2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் நாளை நாடு திரும்புகின்றனர்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 25 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

சோமாலிய கடற்கொள்ளையர்களினால் பிடிக்கப்பட்டு கடந்த வாரம் ஸ்பைன் கடற்படை வீரர்களால் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் அறுவரும் நாளை வியாழக்கிழமை காலை நாடு திரும்பவுள்ளனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி இலங்கை மீனவர்களான எஸ்.கே.கே.வீரசிறி, பெருமாள் செல்வராஜன், வர்ணகுலசூரிய சாந்த செபஸ்தியான், தினேஷ் சுசந்த பெர்னாண்டோ, ஐசட் நிசாந்த பெர்னாண்டோ, வர்ணகுலசூரிய ஜேசுதாஸ் லியோன் ரொட்ரி;கோ ஆகியோர் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டனர்.

இவர்கள் அறுவரும் 'நிமேஸாதுவ' என்ற பெயர் கொண்ட ரோலர் படகில் மீன்பிடிக்க சென்றபோதே கடத்தப்பட்டு 68 கோடி ரூபா (6 மில்லியன்டொலர்) கப்பம் கோரப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களை ஸ்பெயின் போர்க்கப்பல் கடந்த வாரம் மீட்டதுடன் சோமாலிய கடற்கொள்ளையர்கள் 13 பேரையும் கைது செய்திருந்தது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி நிமேஸாதுவ என்ற டோலர் படகில் மீன்பிடிப்பதற்காக குறித்த மீனவர்கள் அறுவரும் சென்ற போது சர்வதேச கடற்பகுதியில் வைத்து படகில் எரிபொருள் தீர்ந்து போயுள்ள நிலையில் படகு தத்தளித்துக் கொண்டிருக்கையில் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் செப்டம்பர் 29ஆம் திகதி பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுவிப்பதற்கு கடற்கொள்ளையர்கள் 68 கோடி ரூபா கப்பமாக கேட்டிருந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி ஸ்பைன் கடற்கடை வீரர்களும் தன்சானியா அதிகாரிகளும் ஒண்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் ஆறு மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

இன்றைய தினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 4.45 மணிக்கு தன்சானியாவின் தாருஸ்ஸலாம் நகர விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு புறப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள், நாளை வியாழக்கிழமை காலை 7.45 மணியளவில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X