2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீதி அமைச்சர் - வாமி பிரதிநிதிகள் சந்திப்பு

Super User   / 2012 மே 03 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக முஸ்லிம் இளைஞர் அமைப்பின் (வாமி) சட்ட ஆலோசகர் குழுவினருக்கும் நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்துவதன் அவசியத்தை அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்தியதோடு இலங்கையில் இன, மத மற்றும் மொழி பேதங்களின்றி புரிந்துணர்வை வளர்ப்பதற்கான செயலமர்வொன்றை நடத்துவது பற்றி ஆராயப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் உட்பட ஆறு பேரை கொண்ட இச்சட்ட ஆலோசகர் குழுவில் இலங்கைக்கான அவ்வமைப்பின் பிரதிநிதி ஒமர் இதிரீஸூம் இடம்பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X