2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கபிலவுக்கு மரண அச்சுறுத்தல்; வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு

Menaka Mookandi   / 2012 மே 07 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் கபில நந்தன சுலோச்சனவுக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.07 மணியளவில் செல்லிட தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் மாநகர சபை உறுப்பினரை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்னவிடம் தான் தெரிவித்ததை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கபில நந்தன தெரிவித்தார்.

5 தடவைகள் மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டு, நான்கு தடவைகள் மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். 2011ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதன் பின்னரே எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வருடம் ஜனவரி மாதம் இது போன்று தொலைபேசி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனவரி 31ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கத்திக்குத்துக்கு இலக்காகி மயிரிழையில் உயிர் தப்பினேன்.

அன்று என் கழுத்தை இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தினால்  வெட்ட முற்பட்ட போது நான் கைகளினால் தடுத்ததனால் கைளில் வெட்டுக் காயங்களோடு தப்பித்தேன்.

இம்முறையும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் எனது நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நான் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X