2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா

Super User   / 2012 மே 13 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளரான காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளவத்தை தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் சாந்தி சச்சிதானந்தம்; புரவலர் காசிம் உமர் மற்றும் கவிஞர் ஜின்னாஹ் சரிபுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கானக் குயிலுக்கு கவிதை குரல்கள் என்ற மகுடத்தில் கவியரங்கம் இதன்போது இடம்பெற்றது. தமிழ் தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கவிஞர்களான நஜ்முல் ஹுசைன், பதியத்தலாவ பாரூக், கலாநெஞ்சன் சாஜகான், வெலிமடை மகாலிங்கம், கிண்ணியா அமீரலி, கலை மகன் பைரூஸ், சுகைதா ஏ கரீம், சைலஜா, கலையழகி வரதராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X