2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

முன்னாள் டி.ஐ.ஜியின் வளர்ப்பு நாய் குறித்து முறைப்பாடுகள்

Super User   / 2012 மே 14 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.எம்.பி. கொட்டகதெனியவின் வளர்ப்பு நாயானது அயலவர்கள் பலரை கடித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது குழந்தையையும் இந்நாய் கடித்துள்ளதாக  இலங்கையின் குறுந்தூர ஓட்ட நட்சத்திரமான சிறியானி குலவன்ஸ, தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக தலங்கம நீதவானுக்கு பொலிஸாரினால்  அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.

பொதுமக்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்திய இத்தகயை சம்பவங்கள் தொடர்பாக அறிவித்தலொன்று விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அந்நாயின் வாய்க்கு மூடியொன்றை அணிவிக்கவும் அதன் எஜமானர் இணங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பாக தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X