2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மத்தி அமைப்பாளர்களாக முஜீபுர், பைரூஸ் நியமனம்

Super User   / 2012 மே 16 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு மத்திய தேர்தல் தொகுதிக்கு ஐக்கிய தேசிய கட்சியினால் இணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண சபை உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான் மற்றும் எம்.எஸ்.எம்.பைரூஸ் ஆகியோரே ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மத்திய தேர்தல் தொகுதி அமைப்பாளர்காள நியமிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இவர்கள் இருவருக்குமான நியமன கடிதம் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்கவினால் வழங்க்கப்பட்டது.

கொழும்பு மாநகர சபை தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மத்திய தேர்தல் தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.மஹ்ரூப் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .