2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வாமி அமைப்பின் தமாம் கிளை உயர் அதிகாரிகள் இலங்கை விஜயம்

Super User   / 2012 மே 18 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


வாமி நிறுவனத்தின் கிழக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான கலாநிதி அஹ்மத் பின் அல் உவைஸின் தலைமையில் ஒரு குழுவினர் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தனர்.

இக்குழுவினர் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் பின் அப்துர் ரஹ்மானை தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹகீமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

வாமி நிறுவனத்தின் இலங்கை கிளை விஜயம் மேற்கொண்ட இக்குழுவினர், அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் அடைவுகள் பற்றி அறிந்துகொண்டதுடன் தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.

வாமி கல்விப் பிரிவினால் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்ற திறமையான மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உபதேசங்களை வழங்கினர். அத்துடன் மலே முஸ்லிம்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றிலும் ஈடுபட்டனர்.
 
இந்த தூதுக்குழுவில் சட்ட உறுப்பினர்களான கலாநிதி அஹ்மத் புஆத் பின் முகம்மது பின் அப்துல் அஸீஸ் அல் மாஜித், கலாநிதி ஸாலிஹ் பின் அப்துர் ரஹ்மான் அல் யூஸுப், கலாநிதி முஹம்மத் பின் அப்துல் அஸீஸ் அல் சுஐபி உஸ்தாத் பஹ்த் பின் அலி மற்றும் உஸ்தாத் முஹம்மத் பின் அஹ்மத் அல் உவைஸ் ஆகியோரே இடம்பெற்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .