2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீதேறி விளக்கமறியல் கைதிகள் சத்தியாகிரகம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 19 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீதேறி விளக்கமறியல் கைதிகள் சிலர் இன்று அதிகாலை முதல் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தம்மை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரியே மேற்படி விளக்கமறியல் கைதிகள் 21பேர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈ:டுபட்டனர்.

பாலியல் வல்லுறவு, போதைப்பொருள் பாவனை, கொள்ளை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிலாபம் மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட கைதிகளே இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கைதிகளிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து, கைதிகள் கூரையில் இருந்து இறங்கியதுடன் சிறைச்சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X