2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தமிழ் சங்கம் ஒழுங்கை தொடர்பில் அனைத்துத் தரப்பு பேச்சு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 30 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வெள்ளவத்தை 57ஆவது ஒழுங்கையை 'கொழும்பு தமிழ் சங்கம் ஒழுங்கை' என பெயரிடுவதில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அனைத்து தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் நான்காம் திகதி செவ்வாய்கிழமை காலை மேல்மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மாகாணசபை உறுப்பினர் எஸ்ராஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக மேல்மாகாணசபை முதல்வர் பிரசன்ன ரணதுங்கவுடன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையை அடுத்து இந்த திகதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முதலமைச்சர், மேல்மாகாணசபையின் ஜ.ம.மு உறுப்பினர்கள் உட்பட அனைத்துகட்சி உறுப்பினர்கள், கொழும்பு மாநகரசபை மேயர், மாநகரசபையின் ஜ.ம.மு உறுப்பினர்கள் உட்பட அனைத்துக்கட்சி உறுப்பினர்கள், மாநகரசபையினதும், மாகாணசபையினதும் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

அத்துடன் ஆளுநர் அலவி மௌலானாவின் சார்பாக அவரது அலுவலக இயக்குனர் ஹேமசந்திர கலந்துகொள்வார் என ஆளுநர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வருக்கும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இந்த பேச்சுவார்த்தையில் சமூமளித்து கருத்துகளை தெரிவிப்பார்கள். இதன்போது இந்த விவகாரம் சுமூகமாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது' என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X