2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீதவானின் மணிபர்ஸை 'பிக்பொக்கட்" அடித்த இருவர் கைது

Kanagaraj   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதவானின் மணிபர்ஸ் "பிக்பொக்கட்" அடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். கொழும்பில் இன்று நடைபெறும் கூட்டத்திற்கு நீதிச்சேவை ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் வருகை தந்தபோதே நீதவானின் மணிபர்ஸ் பிக்பொக்கட் அடிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து ரயிலில் வருகைதந்த வவுனியா நீதவான் எலக்ஸ் ராஜாவின் மணிபர்ஸே இவ்வாறு பிக்பொக்கட் அடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் என்று தெரிவித்த பொலிஸார் அவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  Comments - 0

  • fasmin Monday, 03 December 2012 08:36 AM

    கடலுக்கே உப்பா???

    Reply : 0       0

    koneswaransaro Monday, 03 December 2012 12:37 PM

    ஆசியாவின் ஆச்சரியம் என்பது இதுதானோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X