2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடு அதிகரிப்பு: அசாத்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 05 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அழகன் கனகராஜ்)

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் அவற்றின் பின்னணியில் அரசு செயற்படுகிறதா? என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது என முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்துள்ளன. முஸ்லிம்களை இலக்குவைத்து  நாடு 100 வருடங்கள் பின்னால்   செல்ல முயற்சிக்கின்றது. முஸ்லிம்களை இலக்கு வைப்பதற்காகவே ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்குகின்றது. இது ஆபத்தான விடயமாகும் என்பதனால் இது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X