2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

வெதுப்பகத்தில் தீ

Kogilavani   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.எம் பௌஸான்)

மல்வானை நகர் பகுதியில் வெதுப்பகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்;ட தீவிபத்தினால் அக்கடை பெருமளவில் எரிந்து நாசமாகியுள்ளது.

வெதுப்பகத்தின்; மேல்மாடியிலிருந்து தீ பரவ ஆரம்பித்துள்ளதகவும் இது தொடர்பில் வெளியில் உள்ளவர்கள் கூச்சலிடும் வரை தாம் அறியவில்லை என்றும் இத் தீவிபத்து தொடர்பாக வெதுப்பகத்தில் கடமையில் இருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புப் படையினரினதும் பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகளினதும் முயற்சியால் அதிகாலை 4 மணியளவில் இத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இத் தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை என்றும் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணகளை மேற்கொண்டு வருவதாகவும பியகம பொலிஸார் தெரிவித்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X