2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தாருஸ்ஸலாமிற்கு ஐக்கிய அரபு இராஜ்சிய குழு விஜயம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் பணிமனைக்கு ஐக்கிய அரபு இராஜ்சிய குழுவினர் நேற்று முன்தினம் விஜயம் செய்து அங்கு வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான குர்ஆன் பிரதியினைப் பார்வையிட்டனர்.

கிழக்கு மாகாண அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமத்தின் அழைப்பின் பேரில் ஐக்கிய அரபு இராஜ்சியத்தின் கமீத் சகீல் அல் அக்கீலி குழும நிறுவனத்தின் தலைவர் குசைன் தாகிர் தலைமையிலான குழுவினர் இலங்கை வந்திருந்தனர்.

இதன்போதே, தாருஸ்ஸலாமிலுள்ள மர்ஹும் அஷ்ரஃப் பணிமனைக்கு ஐக்கிய அரபு இராஜ்சிய குழுவினர் விஜயம் செய்து அங்கு வைக்கப்பட்டுள்ள அரிய பொருட்கள் மற்றும் பிரமாண்டமான குர்ஆன் பிரதி போன்றவற்றினைப் பார்வையிட்டனர்.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், ஐக்கிய அரபு இராஜ்சிய குழுவினரை தாருஸ்ஸலாமுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

மேற்படி இலங்கைப் பயணத்தின் போது, ஐக்கிய அரபு இராஜ்சிய குழுவினர் பல்வேறு இடங்களுக்கும் சென்றதோடு, அரச உயர் அதிகாரிகள் பலரையும் சந்தித்திருந்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X