2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக ஸமீல் நியமனம்

Super User   / 2013 ஜனவரி 01 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ஸமீல் (நளீமி) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை கொழும்பு – 10 டர்லி வீதியிலுள்ள  முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை நிருவாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர், இதற்கு முன்னர்  சமுக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி தனது சுய விருப்பத்தின் பெயரில் உயர் கல்வி அமைச்சிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

உயர்  கல்வி அமைச்சின் தனியார் பல்கலைக்கழக பிரிவின் பணிப்பாளராக தற்போது வை.எல்.எம்.நவவி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: எ.எஸ்.எம்.ஜாவித்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X