2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கைக்குழந்தையின் தாய்க்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஜனவரி 06 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலையில் தந்தையொருவர் தனது கைக்குழந்தையை கொலைச்செய்வதற்கு ஒத்துழைப்பு நல்கியதுடன் அக்கொலையை மூடிமறைப்பதற்கு முயற்சித்த குற்றஞ்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த கைக்குழந்தையின தாயை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெஸ்பேவ நீதவான் ஷமந்த மதநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த கைக்குழந்தையின் மரணச்சடங்கு இன்று நடைபெற்றவேளையில் அதில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்குமாறு குறித்த கைக்குழந்தையின் தாயின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீதவானிடம் கேட்டுகொண்டபோதிலும் அதற்கு நீதவான் அனுமதியளிப்பதற்கு மறுத்துவிட்டார்.

தன்னால் அதற்கு அனுமதிவழங்க முடியாது எனவும் இதுதொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருமாறும் குறித்த சட்டத்தரணிக்கு நீதவான் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தந்தையின் தாக்குதல் காரணமாக குடல் மற்றும் உறுப்புகள் வெடித்து மலம் இறுக்கியதால் பிலியந்தலையைச் சேர்ந்த ஒன்றரை வயது கைக்குழந்தை அண்மையில் மரணமடைந்தது.

இதேவேளை குழந்தையின் தந்தையின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டது.

அத்துடன் அந்த கைக்குழந்தையின் சடலம் பாட்டியிடம் கையளிக்கப்பட்டதுடன் குழந்தையின் தாயை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X