2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

'மக்கள் மருந்தகம்' என்ற பெயரில் இயங்கிய போதைப் பொருள் விற்பனை நிலையம் சுற்றிவளைப்பு

Kanagaraj   / 2013 ஜனவரி 20 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே. என்.முனாஷா

நீர்கொழும்பு அக்கரபனக பிரதேசத்தில் 'மக்கள் மருந்தகம்' என்ற பெயரில் இயங்கி வந்த போதைப் பொருள் விற்பனை நிலையம் ஒன்றை நேற்று சனிக்கிழமை இரவு சுற்றி வளைத்துள்ள வைத்தியர் என்று கூறப்படும்  ஒருவரை கைது செய்ததாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மருந்தகத்தில் போதைப் பொருளுக்கு மாற்றீடாகப் பயன்படுத்தப்படும மாத்திரைகள் இரகசியமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.

17 ஆயிரம் ரூபாவுக்கு போதை மாத்திரைகள் வாங்குவது போன்று சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அனுப்பி நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்த மருந்தகம் கடந்த எட்டு வருடத்திற்கு முன்னர்  ஆரம்பிக்கப்பட்டதாக விசாரணைகளின் போது தெரிவந்துள்ளது.

இச்சுற்றிவளைப்பின் போது போதை மருந்துப் பொருளுக்கு மேலதிகமாக கருச்சிதைவுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

  Comments - 0

  • Palaniandy Saturday, 02 March 2013 05:23 PM

    எம்மில் எத்தனை பேர் மருந்தகங்களில் மருந்தாள‌ரை தேடுகிறோம். நாம் விலைக் கழிவை மாத்திரம் தானே கேட்கிறோம். மருந்தாளர் இல்லாத மருந்தகம் மரண வீடு போன்ற‌து...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X